சர்ச்சையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கோரினார் தலாய்லாமா

சுதந்திரத்திற்கு பின் பிரிவனை ஏற்படாது ஒன்றிணைந்த இந்தியாவுக்குள் முகமது அலி ஜின்னா பிரதமாராக இருந்திருக்கலாம் என தலாய்லாமா கூறிய கருத்துக்கு, அவரே தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்தியாவின் கோவா மாநிலத்தின், பனாஜியில் அமைந்துள்ள கல்லூரியொன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தலாய்லாமா மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த தலாய்லாமா,

இந்தியக் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் அறிவில் ஆழமாக வேரூன்றி உள்ளது. அஹிம்சையின் நிலமான இந்த மண்ணின் பாரம்பரிய அறிவு, தியானம், இரக்கம், மதச்சார்பற்றத் தன்மைகள் உள்ளன. இந்தியாவின் முதல் பிரதமாக முகம்மது அலி ஜின்னா வர வேண்டும் என்று காந்தி விரும்பினார். ஆனால், அதை நேரு மறுத்துவிட்டார். நேரு, தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். நேரு மிகுந்த அனுபவமுள்ளவர். ஆனால், அந்த நேரத்தில் தவறுகள் நடந்தன. காந்தியின் விருப்பப்படி ஜின்னா, பிரதமராக இருந்திருந்தால் நாடு இரண்டாக பிரிந்திருக்காது’ என்று தெரிவித்தார்.

இந் நிலையில் அவரது இந்த கருத்து பரவலாக சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர், எனது கருத்து சர்ச்சையை உருவாக்கிவிட்டது, நான் கூறியதில் தவறு இருக்குமானால் அதற்கு தான் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!