சம்பந்தனுக்கு சார்பான சபாநாயகரின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியாது

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகர் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக எவரும், நீதிமன்றத்தை நாட முடியாது என்று நாடாளுமன்ற அவை முதல்வரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணி கோரி வந்த நிலையில், இரா.சம்பந்தனிடம் உள்ள அந்தப் பதவியை மாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், முன்னர் அனுர பண்டாரநாயக்க சபாநாயகராக இருந்த போது, நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் சவால் விடுக்க முடியாது என்று தீர்ப்பளித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக சபாநாயகர் சரியான தீர்ப்பையே அளித்துள்ளார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!