மனைவியை கொல்ல வீட்டின் மீது விமானத்தை மோதச்செய்த கணவர்!

அமெரிக்காவில் சிறியரக விமானத்தை கடத்தி சென்ற நபர் ஒருவர் தன்னுடைய சொந்த வீட்டில் மோதி வெடிக்க செய்தார். இதில் அந்த நபர் உயிரிழந்த நிலையில் வீட்டிற்குள் இருந்த அவரது மனைவி நூலிழையில் உயிர் தப்பினார். அமெரிக்காவின் உடா பகுதியில் வசித்து வரும் டுவானே என்பவருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த டுவானே அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்.

வீட்டில் இருந்த தன்னுடைய 17 வயது மகனுடன் மட்டும் மிகுந்த மனவேதனையுடன் அவர் பேசி வந்துள்ளார். அண்மையில் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் உடாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறியரக விமானத்தை திருடிய டுவானே, அதை தன்னுடைய வீட்டின்மீது மோதி வெடிக்க வைத்தார். இதில் தீ மளமளவென பரவியதால் டுவானே உயிரிழந்தார். அவருடைய வீட்டின் முன்பகுதியும் தீயில் கருகி சேதமடைந்தது. விமானம் மோதியபோது வீட்டிற்குள் இருந்த அவரது மனைவி உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!