பிரிட்டன் நாடாளுமன்ற பாதுகாப்பு வேலியில் காரை மோதிய நபர் யார்?வெளியாகின விபரங்கள்

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு வெளியே கார்த்தாக்குதலை மேற்கொண்ட நபர் சூடான் வம்சாவளியை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாலி காட்டெர் என்ற நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் பிரிட்டிஸ் பிரஜையான இவர் சூடான் வம்சாவளியை சேர்ந்தவர் என ஐரோப்பிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பிட்ட நபர் சம்பவ இடத்திலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவருடன் தொடர்புடைய மூன்று முகவரிகளில் பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் நடத்தியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் பேர்மிங்காமை சேர்ந்தவர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் பாதுகாப்பு தரப்பினர் அவரை முன்னர் அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

திங்கட்கிழமை இரவு இவர் 115 மைல்கள் காரில் பயணித்து லண்டனிற்கு வந்து தாக்குதல் பகுதிக்கு சென்றுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் ஐந்து வருடங்களிற்கு முன்னர் லண்டனிற்கு வந்தவர் அதிகம் தனிமையில் கழிப்பவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதலிற்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை இவர் இலக்குவைத்ததால் இதனை பயங்கரவாத தாக்குதலாக கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு வேலியை காரால் மோதிய நபரை உடனடியாக கைதுசெய்த ஆயுதமேந்திய பொலிஸார் பெரும் பாராட்டடை பெற்றுருவருகின்றனர்.

ஆபத்தையும் பொருட்படுத்தாது உடனடியாக அப்பகுதிக்கு சென்ற ஆயுதமேந்திய காவல்துறையினர் காருக்குள் இருந்த நபரை வெளியில் இழுத்து எடுத்து கைதுசெய்தனர்.

பொலிஸாரின் இந்த துணிகர நடவடிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் டுவிட்டரில் பாராட்டியுள்ளனர்.

எமது அவசரசேவை பிரிவினரின் துணிச்சலையும் தொழில்சார்செயற்பாட்டையும் நான் நேரில் பார்த்தேன் உடனடி நடவடிக்கைக்காக அவர்களை நான் பாராட்டுகின்றேன் என அமைச்சர் அம்பெர் ரூட் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!