அழகிரியை இயக்குகின்றது பா.ஜ.க. – தி.மு.க.தலைவர்கள் குற்றச்சாட்டு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியை தி.மு.க.விற்கு எதிராக பா.ஜ.க. இயக்குகின்றது என தி.மு.க.வின் சிரேஸ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நேற்று இடம்பெற்ற தி.மு.க.வின் செயற்குழு கூட்டத்தில் பல சிரேஸ்ட தலைவர்கள் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளனர்.

பலர் அழகிரிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள அதேவேளை பா.ஜ.க. அழகிரியை இயக்குகின்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதியின் இறுதிச்சடங்கின் போது அழகிரியுடன் தமிழ பா.ஜ.கவை சேர்ந்த முரளீதர் ராவ் என்பவர் 30 நிமிடங்கள் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதை அடிப்படையாக வைத்தே தி.மு.க. தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்த சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து ஸ்டாலின் தரப்பு ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோன்று கருணாநிதியின் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அழகிரி சந்திக்காததையும் சுட்டிக்காட்டியுள்ள தி.மு.க. வட்டாரங்கள் பா.ஜ.க.வின் தூண்டுதலின் பேரிலேயே அழகிரி அவ்வாறு செயற்பட்டுள்ளார் என சந்தேகம் வெளியிட்டுள்ளன.

இதேவேளை தி.மு.க.தலைவரின் உடலை பார்வையிட வந்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி அழகிரியை சந்திக்க விரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!