டயானாவுக்காக ரகசியமாக தயாரிக்கப்பட்ட இரண்டாவது திருமண உடை! அம்பலமான உண்மை

மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவுக்காக இரண்டாவது திருமண உடையை அவருக்கே தெரியாமல் தயாரிக்கப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.

பிரித்தானிய அரச பரம்பரையில் மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்ட திருமணங்களில் ஒன்று டயானா உடனான இளவரசர் சார்லசின் திருமணமே.

புனித பவுல் பேராலயத்தில் கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா திருமணம் நடைபெற்றது.

இளவரசி டயானாவின் திருமண உடையே அந்த காலகட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. டயானாவின் திருமண உடையானது ivory silk taffeta எனப்படும் பிரத்யேக நூலிழையால் தயாரிக்கப்பட்டதாகும்.

ஆனால் தற்போது அந்த உடை தொடர்பில் முக்கிய விடயம் ஒன்று அம்பலமாகியுள்ளது. இளவரசி டயானா உண்மையில் திருமணத்தன்று வேறு வகையான உடையை அணிந்து செல்ல வேண்டியவர் எனவும் தெரியவந்துள்ளது.

டயானாவின் திருமண உடையை வடிவமைத்த David மற்றும் Elizabeth Emanuel ஆகிய இருவரும், டயானாவுக்கே தெரியாமல் ரகசியமாக இரண்டாவது திருமண உடையையும் வடிமவமைத்து பாதுகாப்பாக வைத்திருந்துள்ளனர்.

முதலில் அவர்கள் வடிவமைத்த உடை தொடர்பில் ஏதேனும் தகவல் வெளியானால், இரண்டாவதாக வடிவமைத்து வைக்கப்பட்டுள்ள உடையை திருமணத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்தனர்.

இன்றளவும் பெருமையாக பேசப்படும் டயானாவின் திருமண உடையை விடவும் அவருக்கே தெரியாமல் வடிவமைத்து வைத்திருந்த இரண்டாவது உடையானது டயானாவின் திருமணத்தில் சிறப்பு சேர்த்திருக்கும் என கூறும் அதன் வடிவமைப்பாளர்கள், அந்த உடையில் கடைசி கட்ட பணிகள் இன்னமும் முழுமையடையாமல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!