பிரதமராக பதவியேற்றார் இம்ரான்கான்

பாக்கிஸ்தானின் 22 வது பிரதமராக இம்ரான்கான் சற்று முன்னர் பதவியேற்றுள்ளார்.

இஸ்லாமபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மமூத் ஹ_சைன் முன்னிலையில் இம்ரான்கான் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

யூலை 25 ம் திகதி இடம்பெற்ற பாக்கிஸ்தானின் 15வது நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கானின் பிடிஐ கட்சி அதிக ஆசனங்களை கைப்பற்றியதை தொடர்ந்தே இம்ரான் கான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம்ரான் கானிற்கு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் நிலவி வந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் அவரிற்கு 176 உறுப்பினர்கள் ஆதரவைதெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து அவர் இன்று பதவியேற்றுள்ளார்.

இம்ரான்கானின்பதவியேற்பு நிகழ்வில் இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கலந்துகொண்டுள்ளார்.

நான் இங்கு அரசியல்வாதியாக வரவில்லை என சித்து தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!