சந்திரிகாவும், மஹிந்தவும் மீண்டும் போட்டியிட முடியாது! – விஜயதாஸ ராஜபக்ஷ

தற்போதைய அரசியல் யாப்பு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது என்று உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பின் மீதான 19 ஆவது திருத்தம் மூன்றாவது தடவையாக ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது. இதுவிடயம் தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு. உயர் நீதிமன்றத்திடம் கோரப்படும் எவ்வித விளக்கமும் நிராகரிக்கப்படும். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தகுதிகாண் தன்மையை எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என்றும் உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!