திருகோணமலையில் அமெரிக்காவின் இராணுவத் தளம்! – திஸ்ஸ விதாரண

திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்கா தனது இராணுவத் தளமாகப் பயன்படுத்துவதற்கு இலங்கையுடன் அமெரிக்கா ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டுள்ளதாக, பேராசிரியர் திஸ்ஸ விதாரண இதனை தெரிவித்துள்ளார். பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடேரா எதற்கு இலங்கை வருகை தந்துள்ளார் எனவும் அவர் எதற்கு திருகோணமலை துறைமுகத்தை பார்வையிட்டுள்ளார் என்பது தொடர்பில் அரசாங்கம் ​விளக்கமளிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் இவ்வாறான ஒப்பந்தங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் , இவ்வாறான ஒப்பந்தங்கள் தொடர்பில் தெரிந்துகொள்வதற்கு மக்களுக்கு உரிமை இருப்பதாகவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!