அரசியல் பழிவாங்கல்களுக்கே விசேட நீதிமன்றங்கள்! – கூட்டு எதிரணி குற்றச்சாட்டு

அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்வதற்காகவே அரசாங்கம் விசேட நீதிமன்றங்களை உருவாக்கியுள்ளது என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பு – நெலும் மாவத்தையில் அ​மைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“ ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே விசேட மேல் நீதிமன்றங்களை உருவாக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது. கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்கே தற்போது அரசாங்கம் விசேட மேல் நீதிமன்றங்களை உருவாக்கியுள்ளது. நாட்டு மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். அதனாலேயே அரசாங்கம் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்தி வருகிறது.” எனவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!