கற்பழித்தவர் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்த போலீசார் – காவல்நிலையத்திலேயே தீக்குளித்து பெண் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் சாஜஹான்பூர் பகுதியில் தன்னை கற்பழித்தவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததால் மனமுடைந்த பெண் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வர்கிறது. உ.பி. மட்டுமன்றி இந்தியா முழுவதும் இந்த அவலநிலை உருவாகி வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்கள் பாதுகாப்பின்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதே சமயம், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளில் சிலர், தங்கள் பணியை முறையாக செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதன் ஒருபகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் சாஜஹான்பூர் பகுதியில் தன்னை கற்பழித்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுத்ததுடன், குற்றவாளியுடன் சமரசம் செய்துகொள்ள அறிவுறுத்தியதால் மனமுடைந்த பெண் காவல்நிலையத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!