அரசையும் அ.தி.மு.கவையும் கவிழ்க்கவோ உடைக்கவோ முடியாது – எடப்பாடி

தமிழக அரசையோ அல்லது ஆளுங்கட்சியான அ.தி.மு.கவையோ யாராலும் கவிழ்க்கவோ உடைக்கவோ முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘மக்களவைக்கு தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்பது மாதங்கள் இருக்கிறது. அதே சமயத்தில் தேர்தல் திகதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் திகதி அறிவித்த பின்னர் கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.

தி.மு.க. தலைவர் தெரிவு குறித்து விடயங்கள் அக்கட்சியின் உள்கட்சி பிரச்சினையாகும். நாங்கள் அடுத்தவர்களைப் பற்றி எப்போதும் பேசுவதில்லை.

பிரச்சினை ஏற்படும் போது அதனடிப்படையில் அரசியல் செய்பவர்கள் நாங்கள் அல்ல. ஆனால் தி.மு.க.விற்கு இது கைவந்த கலை.

சந்தர்ப்பம் கிடைக்கும் போது என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்களோ அதையெல்லாம் செய்வார்கள்.

தி.மு.க. மட்டுமல்ல இது போல எத்தனை தி.மு.க. வந்தாலும் இந்த கட்சியை உடைக்கமுடியாது. இந்த ஆட்சியை கவிழ்க்கவும் முடியாது. அவர்களது எண்ணம் ஒரு போதும் ஈடேறாது.’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!