சிறிலங்காவின் கையில் பிம்ஸ்ரெக் தலைமைமைப் பதவி

வங்காள விரிகுடா விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பான பிம்ஸ்ரெக் அமைப்பின், தலைமைப் பதவி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கப்பட்டுள்ளது.

பிம்ஸ்ரெம் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நான்காவது உச்சி மாநாடு நேற்று நேபாளத்தின் காத்மண்டு நகரில் நிறைவடைந்தது.

இரண்டு நாட்கள் நடந்த இந்த மாநாட்டின் முடிவிலேயே, ஐந்தாவது மாநாட்டை நடத்தவுள்ள, சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

நேபாள பிரதமர் சர்மா ஒளி தலைமைப் பதவியை சிறிலங்கா அதிபரிடம் கையளித்தார்.

இந்தியா, மியான்மார், பங்களாதேஷ், சிறிலங்கா, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகள் இந்த பிம்ஸ்ரெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

உலக சனத்தொகையில் 22 வீதமான மக்கள் வசிக்கின்ற நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பிம்ஸ்ரெக் அமைப்பு செயற்படுவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!