மோதலை சாதகமாக்கி 400 கைதிகள் தப்பியோட்டம்

லிபியாவில் கிளர்ச்சியாளர்களுக்கிடையலான மோதலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு லிபியத் தலைநகர் திரிபோலியில் உள்ள சிறைச்சாலையிலிருந்து 400 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

லிபியாவில் கிளர்ச்சியாளர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அங்கு பதட்டமான சூழல் நிலவுகின்றது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட அப்பன் ஜார என்ற சிறையில் உள்ள சிறைக் கைதிகள் சிறையில் கலவரத்தை ஏற்படுத்திய பின்னர் அங்கிருந்த சிறைக் காவலர்களை அச்சுறத்தி தப்பிச் சென்றுள்ளனர்,

தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சிய சிறைக் காவலர்கள் அங்கு ஏற்பட்ட கலவரத்தை அடக்கவுமில்லை. தப்பி ஓடிய கைதிகளை தடுத்து நிறுத்தவுமில்லை.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்ட சர்வாதிகாரி கடாபியின் ஆதரவாளர்கள் ஆவர்.

இந் நிலையில் நாட்டில் அமைதியைப் பேணுமாறு கோரி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!