தேர்தல் மோசடிகளைத் தடுக்க புதிய சட்டங்களுடன் தயாராகும் ஆணைக்குழு!

தேர்தல் காலப் பகுதியில் பாரிய அளவில் இடம்பெறும் நிதி வீண் விரயம், மோசடி, ஊழல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அரச நிதி மற்றும் நாட்டின் நிதி பாரிய அளவில் தேர்தல் காலப்பகுதியில் மக்கள் பிரதிநிதிகளால் ஒதுக்கீடு செய்யப்படுவது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊழல் மோசடி எதிர்ப்பு அமைப்பு பல்வேறு மட்டங்களில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. இதனால் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் அனுமதியுடன் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக ஆணைக்குழுவின் சட்டத்துறைக்கான பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இது தொடர்பான திருத்தச்சட்டமூலம் தற்போது அரச சட்ட திருத்த தயாரிப்புப் பிரிவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!