சத்திர சிகிச்­சையின் பின் துடிதுடித்து இறந்த நபர்: மார்­புக்குள் ஊசியை வைத்து தைத்த கொடூரம்

73 வயது நப­ரொ­ரு­வ­ருக்கு மேற்­கொள்­ளப்­பட்ட இரு­தய சத்திர சிகிச்­சையின் போது வைத்தியர்கள் தவ­று­த­லாக ஊசி­யொன்றை அந்­ந­பரின் மார்­புக்குள் வைத்து தைத்­ததால் அந்­நபர் கடும் வேத­னையை அனு­ப­வித்து மர­ண­மான அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் அமெ­ரிக்க தென்­னஸி மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

லபாயெட் எனும் இடத்தைச் சேர்ந்த ஜோன் பேர்ன்ஸ் ஜோன்ஸன் என்ற நபரே சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ணர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட மேற்­படி தவறால் கடும் வேத­னையை அனு­ப­வித்த நிலையில் உயி­ரி­ழந்­துள்ளார்.

நஷ்­வில்­லே­யி­லுள்ள றைஸ்டார் வைத்தியசாலையில் சத்­தி­ர ­சி­கிச்சை பூர்த்­தி­ய­டைந்­த­தற்கு 9 மணித்­தி­யா­லங்­களின் பின்­னரே, சத்திர சிகிச்­சையை மேற்­கொண்ட வைத்தியரான ஸ்ரீகுமார் சுப்­பி­ர­ம­ணியன் சத்திர சிகிச்­சைக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஊசி­களில் ஒன்று காணாமல் போயுள்­ளதை அவ­தா­னித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து அவரும் அவ­ரது வைத்தியக் குழு­வி­னரும் ஜோன்­ஸனின் இரு­தயப் பகு­தியில் திரும்­பவும் மேல­தி­க­மாக 3 மணி நேர சத்திர சிகிச்­சையை முன்­னெ­டுத்து அவ­ரது மார்பில் வைத்து தைக்­கப்­பட்ட ஊசியை மீட்கும் செயற்­பாட்டில் ஈடு­பட்­டனர். ஆனால் அவர்­க­ளுக்கு அந்த ஊசியைக் கண்­டு­பி­டித்து அகற்­று­வது சாத்­தி­ய­மா­க­வில்லை.

இந்­நி­லையில் முயற்­சியைக் கைவிட்டு அவ­ரது மார்புப் பகு­தியை மீண்டும் வைத்திய­ர்கள் தைத்­துள்­ளனர். இந்­நி­லையில் தொடர்ந்து 30 நாட்கள் கடும் வேத­னை­யையும் துன்­பத்­தையும் அனு­ப­வித்த ஜோன்ஸன் இறு­தியில் மர­ண­மானார்.

இத­னை­ய­டுத்து ஜோன்­ஸனின் குடும்­பத்­தினர் றைஸ்டார் வைத்தியசாலைக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­துள்­ளமை குறிப்பிடதக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!