கோத்தாவுக்கு வெட்கமில்லையா? – ராஜித

கொழும்பில் இன்று கூட்டு எதிரணி நடத்தும் பேரணியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு வேட்கமில்லை என்று சாடியுள்ளார் சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன.

“இன்று நடத்தவுள்ள கூட்டு எதிரணியின் பேரணிக்கு கோத்தாபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருப்பது நகைச்சுவையாக உள்ளது.

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், ரதுபஸ்வெல, சிலாபம், கட்டுநாயக்கவில் பொதுமக்கள் நடத்திய போராட்டங்களின் போது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர் அவர். இந்த நடவடிக்கைகளுக்காக கோத்தாபய ராஜபக்ச வெட்கப்பட வேண்டும்.

ஆனால் அவரே மக்கள் பேரணிக்கு வெட்கமின்றி அழைப்பு விடுத்திருக்கிறார். இது ஒரு நகைச்சுவை” என்றும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!