விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படத் தயார்! -சுமந்திரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் செயற்பட தயாராக இருக்கின்றோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“ தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தலைமைப் பாத்திரத்தில் தவறிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்பவர், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க முடியாது. அதற்குச் சாத்தியமில்லை. எனவே, வடமாகாண முதலமைச்சர் தான் விரும்புகின்ற தனது நான்காவது தெரிவினை கையில் எடுக்க வேண்டும்.

கட்சி அரசியலைவிட்டு விலகி, இங்கே இருக்கின்ற அரசியல் கட்சிகளையும், வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வினைப் பெறும் முயற்சியின் ஒட்டுமொத்தமான தலைமை பாகத்தை வகிக்கும் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்க விக்னேஸ்வரன் முன்வருவாரானால், அவரோடு இணங்கி, அவரது தலைமைக்குக் கீழ், மிகவும் சந்தோசமாக செயற்பட நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.

வடமாகாண முதலமைச்சர் தமிழ் தேசியக் கூட்டமைபில் இருந்து வெளியேறி, கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்டால் அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்க முடியாது.அது அவர் செய்கின்ற தவறு. இந்நிலையில், தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குழைக்காமல் இருக்க நாங்கள் தேர்தலில் மோதிக்கொள்ள கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!