கனடா போன்ற அதிகாரப் பகிர்வு முறையே சிறிலங்காவுக்கு அவசியம் – சம்பந்தன்

சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு கனடா போன்ற நாடுகளில் காணப்படும் அதிகாரப்பகிர்வு முறைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். என்று, சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் இன்று கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போதே, கனடா போன்ற நாடுகளில் காணப்படும் அதிகாரப்பகிர்வு முறைமைகளின் அடைப்படையில் இலங்கையின் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டியது அவசியம் என்று இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!