இன்று கைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜேகுணரத்ன

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு நகரப் பகுதியில், 2008-09 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத், நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உதவினார் என்று அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டு நீதிவான் லங்கா ஜெயரத்ன ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அட்மிரல் விஜேகுணரத்னவை இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையக்தில் முன்னிலையாகுமாறும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் முன்னிலையாகாவிடின், அதிகாரிகள் அவரது இல்லத்துக்குச் சென்று கைது செய்வார்கள் என்றும் சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!