சீனாவில் ஒருகுழந்தை திட்டம் விரைவில் முடிகிறது

முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து மனிதவள மேம்பாட்டை பெருக்க ஒருகுழந்தை திட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர சீனா முடிவு செய்துள்ளது.

சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. இதனால் அங்கு வளர்ந்து வந்த மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் அங்கு முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மனித வளம் குறைந்தது.

2016-ம் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு 1 கோடியே 72 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டில் அது 1 கோடியே 20 லட்சமாக குறைந்துவிட்டது. அதே நேரத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் விகிதம் 17.3 சதவீதமாக அதிகரித்துவிட்டது.

தற்போது சீனாவின் மக்கள் தொகை 140 கோடி. முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து மனிதவள மேம்பாட்டை பெருக்க ஒருகுழந்தை திட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர சீனா முடிவு செய்துள்ளது.

அதற்காக ஒருஅறிவிப்பை தேசிய சுகாதர கமி‌ஷன் அறிவித்துள்ளது. அதன்படி ஒருகுழந்தை திட்டம் துறை இனி மக்கள் தொகை கண்காணிப்பு மற்றும் குடும்ப மேம்பாடு என மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சீன குடும்பங்களின் மேம்பாட்டுக்கு ஆதரவாக செயல்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!