இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு

இந்திய- சிறிலங்கா கடற்படைகள் திருகோணமலையில் நடத்தி வந்த SLINEX-2018 கூட்டுப் பயிற்சி கடந்தவாரம் நிறைவடைந்துள்ளது.

கடந்த 7ஆம் நாள் ஆரம்பமாகிய இந்தக் கூட்டுப் பயிற்சி 17ஆம் நாள் நிறைவடைந்தது.

துறைமுகம், கடல் என இரண்டு கட்டங்களாக, நடந்த ஒரு வார கால கூட்டுப் பயிற்சியில் இரண்டு நாடுகளினதும், 1000 கடற்படையினர் பங்கேற்றனர்.

சிறிலங்கா கடற்படையின் சயுரால, சமுத்ர, சுரனிமல ஆகிய போர்க்கப்பல்களும், இந்தியக் கடற்படையின், சுமித்ரா கிர்ச், கோரா டிவ் ஆகிய போர்க்கப்பர்களும், இரண்டு டோனியர் விமானங்கள் மற்றும் ஒரு உலங்குவானூர்தியும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றன.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் முதல் முறையாக, சிறிலங்கா கடற்படையின் சயுரால போர்க்கப்பலில், சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தி தரையிறக்கப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!