வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் முயற்சிகள் தீவிரம்!

2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு முயற்சிகள், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டு எதிரணியுடன் இணைந்து பிரதான அரசியல் கட்சிகள் சில, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தங்களுடைய ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். இந்த முயற்சிக்கு, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஒத்துழைப்பு நல்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனரெனவும் கூறப்படுகிறது.

இதில், அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் இணைந்துள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரடங்கிய அணி, பிரதான வகிபாகத்தை மேற்கொண்டுள்ளது என்றும், வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ள​னர் என்றும் அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!