மோசடி வழக்கில் சிக்கிய கம்மன்பில வெளிநாடு செல்ல அனுமதி!

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இரண்டுவார காலத்துக்கு வெளிநாடு சென்று வர, கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை போலி ஆவணங்களை பயன்படுத்தி, 21 மில்லியன் ரூபாவுக்கு விற்பனைச் செய்து நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. த வழக்கு,நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, பிரித்தானியா சென்றுவர, கம்மன்பில நீதிமன்றில் முன்வைத்திருந்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய நீதிமன்றம், அவருக்கு 2 வாரங்கள் வரை வெளிநாடு சென்றுவர அனுமதியளித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!