400 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு : இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தும் ஆதாரங்கள்

போர்த்துக்கல் நாட்டில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பல் லிஸ்பனின் புறநகரான கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து 400 ஆண்டுகளுக்கு முன்னர் நறுமணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு போரத்துக்கல்லிற்கு சென்ற கப்பல் லிஸ்பன் அருகே கடலில் மூழ்கியது.

இந் நிலையில் மூழ்கிய கப்பல் கடந்த 3ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட கப்பலின் உடைந்த பாகத்தில் 40 அடி ஆழத்தில் நறுமணப் பொருட்கள், 9 பித்தளை பீரங்கிகள், போர்த்துக்கேயர் பயன்படுத்தும் ஆடை அலங்கார கருவிகள், சீன செரமிக்ஸ் பொருட்கள் மற்றும் அடிமைகளை விலைக்கு வாங்க பயன்படுத்தும் நாணயத்தாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கி.பி 1575ற்கும் 1625ற்கும் இடையே போர்த்துக்கல் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான நறுமணப் பொருட்கள் வர்த்தகம் உச்சக்கட்டத்திலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!