அரசியல் கைதிகள் விவகாரம் – பிரதமர், சட்டமா அதிபர், கூட்டமைப்பு இன்று அலரி மாளிகையில் முக்கிய பேச்சு!

[ File # csp5824534, License # 1894429 ]
Licensed through http://www.canstockphoto.com in accordance with the End User License Agreement (http://www.canstockphoto.com/legal.php)
(c) Can Stock Photo Inc. / rudall30
தமிழ் அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம் தொடர்­பாக, சட்­டமா அதி­பர், பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆகியோருக்கிடை­யி­லான இன்று மாலை 3 மணிக்கு அலரி மாளி­கை­யில் முக்­கிய சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளது.

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் குறு­கிய கால மறு­வாழ்வு வழங்கி விடு­விக்க வேண்­டும் என்று கோரி கடந்த 14ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ள­னர். 10 பேர் உண்ணாவிரதப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

அவர்­க­ளில் இரு­வர் நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள். அநு­ரா­த­பு­ரம் பொது மருத்­து­வ­ம­னை­யில் அவர்­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்­கள். ஏனை­யோர் அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­றார்­கள். அவர்­க­ளுக்கு காலை­யும் மாலை­யும் சேலைன் ஏற்­றப்­ப­டு­கின்­றது. உடல் நிலை மோச­டைந்­தும் வரு­கின்­றது.

அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம் தொடர்­பில் கடந்த 18ஆம் திகதி பிரதமரு­டன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் பேச்சு நடத்­தி­யி­ருந்­தார். சட்­டமா அதி­ப­ரு­டன் பேசியே முடிவு செய்­ய­லாம் என்று பிரதமர் குறிப்­பிட்­டி­ருந்­தார். அந்­தச் சம­யத்­தில் சட்­டமா அதி­பர் நாட்­டில் இருக்­க­வில்லை. அவர் நேற்று நாடு திரும்­பி­னார். இந்த நிலை­யில் இன்று மாலை 3 மணிக்கு அல­ரி­மா­ளி­கை­யில் சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளது. இந்­தச் சந்­திப்பு நீதி அமைச்­ச­ரும் அழைக்­கப்­ப­ட­லாம் என்று தெரி­கின்­றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!