வரவு செலவு திட்டத்தை சந்தர்ப்பமாக பயன்படுத்தி அரசாங்கத்தில் இருந்து விலகுங்கள் : ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்வதாக இருந்தால் ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கமுடியாது. அதனால் அடுத்த வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டையும் நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்துக்கொள்ளவும் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் பயணிக்க முடியாது. அதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருக்கும் 23பேரும் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிரணியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க முன்வரவேண்டும். அதற்காக எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!