கொமன்வெல்த் செயலருடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு

சிறிலங்காவில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதிலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும், முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக, கொமன்வெல்த் செயலாளர் நாயகம், பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று கொமன்வெல்த் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்டைச் சந்தித்தார்.

இதன் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார் என்று, சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில், கடந்த மூன்றரை ஆண்டுகளில், நல்லிணக்கம், ஜனநாயகத்தைப் பலப்படுத்துதல், மனித உரிமைகளை மீள நிலைப்படுத்தல் போன்றவற்றில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து சிறிலங்கா அதிபர் விளக்கிக் கூறியுள்ளார்.

அத்துடன் கொமன்வெல்த் செயலாளர் நாயகத்தை மீண்டும் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், சிறிலங்காவின் அபிவிருத்தி, நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு கொமன்வெல்த் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!