அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் கனடா குடியுரிமை ரத்து!!!

மியன்மார் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு கனடா வழங்கிய கௌரவ குடியுரிமையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை அந் நாட்டு நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

ஆங் சான் சூகி தனது ஜனநாயகப் போராட்டத்திற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராவார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருந்தாலும் மியன்மாரின் தலைவரான பிறகு சிறுபான்மை இனமான ரோஹிங்யா முஸ்லிம்களின் படுகொலை விவகாரத்தில் இராணுவத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதால் அவர் மீது பல்வேறு நாடுகள் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இந் நிலையிலேயே கனடா நாடாளுமன்றம் இத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!