பொருளாதார வீழ்ச்சி குறித்து கோத்தாவின் கருத்து வேடிக்கையானது – ரஞ்சித் மத்தும பண்டார

அரசியல் பழிவாங்கல்களே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை வேடிக்கையான விடயமென சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதார நலன் கருதி உருவாக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமானநிலையம் போன்றவற்றை கடந்த அரசாங்கத்தின் மீதான வைராக்கியத்தினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முடக்கினார் என குறிப்பிட்டிருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே சட்ட ஒழுங்கு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வெறுமனே கடன்களை தங்கிய அபிவிருத்தியை நோக்கி தேசிய அரசாங்கம் செல்லவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் போன்றவை நாட்டுக்கு எந்தவித வருமானத்தையும் பெற்றுத் தரவில்லை.

மாறாக கடனில் நிலைகொண்டுள்ள நிறுவனங்களாகவே அவை இரண்டும் காணபடுகின்றன. நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வருமானமற்ற வெறுமனே கடன்களில் தங்கிய அபவிருத்தியை நோக்கி தேசிய அரசாங்கம் செல்லவில்லை.

குற்றங்கள் வெளிவரும்போது அரசாங்கத்தின் மீது குறை கூறுவது இயல்பான விடயமே என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!