இடைக்கால அரசாங்கம் அமைக்கும் யோசனை – கூட்டு எதிரணிக்குள் பிளவு!

இடைக்கால அல்லது கூட்டு அரசாங்கம் அமைப்பதை விடுத்து, மக்கள் வாக்குகளைக் கொண்டு, தனி அரசாங்கமொன்றே உருவாக்கப்பட வேண்டுமென, பசில் ராஜபக்ச தலைமையில் நேற்று நடந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சிமன்றத் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பத்தரமுல்லயில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில், கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில், நேற்று மாலை இடம்பெற்ற, பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்களது மாவட்ட நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தின் போதே,இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனை தொடர்பில் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளனர். இந்தக் கலந்துரையாடல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில், இன்று இரவு இடம்பெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலின் போது, மேற்படி இடைக்கால அரசாங்கம் தொடர்பான தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!