நாடாளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள, பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்று நாடாளுமன்றத்தில், இந்தச் சட்டவரைவைச் சமர்ப்பித்தார்.

இந்தச் சட்ட வரைவுக்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்தால், 1979ஆம் ஆண்டின் 48 ஆவது இலக்க, பயங்கரவாத தடைச் சட்டம் காலாவதியாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!