எங்­க­ளு­டன் எவ­ரும் எவரும் இணையலாமாம் – டிலான் பெரேரா !!

கூட்டு எதிர்­க்கட்சி எது­வும் கிடை­யாது. அனைத்­துக் கட்­சி­க­ளும் கூட்டு எதி­ர­ணி­தான். எங்­க­ளு­டன் எவ­ரும் இணைந்து கொள்­ள­லாம் இவ்­வாறு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஊட­கப் பேச்­சா­ளர் டிலான் பெரேரா தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஆகி­ய­ன­வற்­றில் பொதுச் செய­லர்­கள் எவ­ரும் இல்லை. பொது­வா­கக் கோள் சொல்­ப­வர்­கள் இரண்டு பேர் இருக்­கின்­றனர். அவர்­களே தலைமை அமைச்­ச­ரி­டம் சென்று கட்சி தொடர்­பான விட­யங்­களைச் சொல்­லு­கின்­றனர். தலைமை அமைச்­ச­ரி­டம் கோள் சொல்­வது இந்த இரண்டு நபர்­க­ளே­யா­கும். நாம் எதிர்க்­கட்­சி­யில் அமர்ந்து கொள்­வோம்.

ஒன்று அல்ல நூறு வழக்­குத் தொடர்ந்­தா­லும் அஞ்­சப் போவ­தில்லை. நீதி­மன்­றம் நேர்­மை­யாகச் செயற்­ப­டு­வது மிகுந்த மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­து­கின்­றது. கூட்டு எதிர்க்­கட்சி என்று ஒரு கட்சி கிடை­யாது. அனைத்­துக் கட்­சி­க­ளும் கூட்டு எதி­ர­ணி­யில் இணைந்து கொள்ள முடி­யும். அதற்கு எந்­தத் தடை­யு­மில்லை – – என்­றார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!