அதிர்ச்சியை ஏற்படுத்திய 50,000 ரூபா போலி நாணயத் தாள்கள்

சிறிலங்காவில், 50,000 ரூபா போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, சிறிலங்கா காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்காவில், 5,000 ரூபா மாத்திரமே, மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டு புழக்கத்தில் உள்ள அதிக பெறுமதி கொண்ட நாணயத்தாள் ஆகும்.

தற்போது புழக்கத்தில் உள்ள 5,000 ரூபா நாணயத் தாளின் வடிவமைப்பில், 50,000 ரூபா என அச்சிடப்பட்ட போலி நாணயத் தாள்களே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தப் போலி நாணயத் தாள்களை அச்சிடும் போது தவறுதலாக ஒரு 0 மேலதிகமாக அச்சிடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

குருநாகல பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட இந்த போலி நாணயத் தாள்கள் தொடர்பாக, வணிகர் ஒருவரையும், தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் ஒருவரையும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!