சவுதி பத்திரிகையாளர் கொல்லப்பட்டுவிட்டார் – டிரம்ப்

சவுதியை சேர்ந்த பத்திரிகையாளர் கொல்லப்பட்டுவிட்டார் என கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் உள்ள சவுதிஅரேபியா தூதரகத்திற்கு சென்ற பத்திரிகையாளர் ஜமால் கஜோசி கொல்லப்பட்டார் என்ற தகவல் பெரும் பரபரப்பினை சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவும் துருக்கியும் முன்னெடுத்துள்ள விசாரணைகளின் முடிவு வெளியான பின்னரே உறுதியான முடிவை வெளியிடமுடியுமென்வும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கஜோஜியின் மரணத்தில் சவுதி அரேபியாவிற்கு தொடர்புள்ளமை உறுதியானால் சவுதி அரேபியா கடும் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர் இறந்துவிட்டார் என்ற முடிவிற்கே வரவேண்டியுள்ளது இது மிகவும் துயரமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் சவுதிஅரேபியாவிற்கு தொடர்புள்ளமை உறுதியாளால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள டிரம்ப் மிகக்கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும்,இது மோசமான விடயம் மிகமிக மோசமான விடயம் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!