இராணுவ அதிகாரி மீதான போர்க்குற்றச்சாட்டு – மௌனம் காக்கும் சிறிலங்கா அரசாங்கம்

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவ அதிகாரியை திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள முடிவு குறித்து சிறிலங்கா அரசாங்கம் இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது.

போர்க்குற்றச்சாட்டு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, லெப்.கேணல் கலன பிரியங்கார லங்காமித்ர அமுனுபுரேவை, உடனடியாக திருப்பி அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று நியூயோர்க்கில் தகவல் வெளியிட்டார்.

இதையடுத்து, ஏபி செய்தி நிறுவனம், ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதரகத்துடன் தொடர்பு கொண்டது.

எனினும், ஐ.நாவின் இந்த முடிவு குறித்து கருத்து வெளியிட, ஐ.நாவுக்கான தூதுவர் அங்கு இல்லை என்று நியூயோரக்கில் உள்ள சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள சிறிலங்கா அரச மற்றும் இராணுவ அதிகாரிகளும் இதுபற்றி எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!