சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்றார் அலய்னா

சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த நிகழ்வில், உதவிச் செயலர் டேவிட் ஹாலே முன்பாக, அலய்னா ரெப்லிட்ஸ் பதவியேற்றார்.

அவர் மிக விரைவில் சிறிலங்காவில் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!