படுகொலை செய்வதற்கு தனது நாடான இந்தியாவே முயற்சிப்பதாக இந்திய பிரஜை தெரிவிப்பு:

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டமிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை தன்னை ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உடல்ரீதியான துன்புறுத்தி வருவதாக நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளாா்.

குற்றப் புலனாய்வுத் திணைக் களத்தி னுள் தன்னை படுகொலை செய்வத ற்கு தனது நாடான இந்தியாவே முய ற்சித்து வருவதாகவும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த இந்தியப் பிரஜை எழுத்து மூல முறைப்பாடு ஒன்றை இன்றைய தினம் பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை படுகொலை செய்வது தொடர்பான பேச் சுக்கள் அடங்கிய குரல் பதிவொன்றை மோசடி தடுப்புப் பிரிவின் பொறுப்பதி காரி நாமல் குமார என்பவர் ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி அம்பலப்படுத்தி யுள்ளாா். குறித்த குரல் பதிவானது பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப் பதிகாரி நாலக்க டி சில்வாவினுடயது என்று முறையிடப்பட்டதை அடுத்து இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு நடாத்தியுள் ளது.

அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவின் குரல் பதிவின் அசலை வழங்கியிருந்த நிலையில், அதனை குறி த்த திணைக்களமும் உறுதிசெய்தது. இதனையடுத்து நாலக்க டி சில்வா மீது மூன்று நாட்கள் விசாரணைகளை நடத்தியிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு.

சுமார் 20 மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலத்தையும் பதிவு செய் திருந்தது. இந்த நிலையில் இது தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று காலை நடைபெற்றது.

மன்றில் முன்னிலையாகிய குற்றப் புலனாய்வு அதிகாரிகள், விசாரணையின் போது கிடைக்கப்பெற்ற 124 குரல் பதிவுகளில் 123 குரல் பதிவுகள் நாலக்கடி சில்வாவினுடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியப்படுத்தி யுள்ளனர்.

இவ் விவகாரம் தொடர்பான நாலக்க டி சில்வா மீது இன்றைய தினமும் விசார ணைகளை நான்காவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக குற் றப் புலனாய்வு அதிகாரிகள் மன்றில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா பயன்படுத்திய மடிக் கணினியை விசாரணைகளுக்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கும்படி இரகசிய பொலிஸாருக்கு நீதவான் இன்று உத்தரவு பிறப்பித் துள்ளார்.

இதேவேளை இன்றைய வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன் னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரான இந்தியப் பிரஜை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத் துள்ளார்.

தன்னை உடல் ரீதியாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் துன்புறுத்தி வருவதா கவும் இதனால் தனது பாதுகாப்பு குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி யும் எழுத்து மூலமாக நீதிமன்றத்திடம் அவர் இன்று முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார்.

இது தவிர, தனது தாய்நாடான இந்தியாவே தன்னை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினுள் வைத்து படுகொலை செய்வதற்கு முயற்சித்து வருவ தாகவும் குறித்த இந்தியப் பிரஜை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!