அரசியலமைப்பை மதித்து செயற்பட வேண்டும் – பிரித்தானியா

அனைத்துக் கட்சிகள் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரிகள் சிறிலங்காவின் அரசியலமைப்பை மதித்து, சரியான அரசியல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ச நேற்று சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் பற்றிக் மார்க் பீல்ட் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவின் பிந்திய நிலவரங்கள் குறித்து கரிசனையுடன், பிரித்தானியா நெருக்கமாக, கண்காணித்து வருகிறது. என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் பிரித்தானியர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம், பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் திடீர் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், விழிப்பாக இருக்குமாறும், அரசியல் கூட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பேரணிகளை தவிர்க்குமாறும், அதில் கூறப்பட்டுள்ளது,

தொடர்ச்சியாக நிலைமைகளை கண்காணித்து, சரியான பயண ஆலோசனை வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!