மீண்டும் ரணில் வந்தால் ஒரு மணிநேரம் கூட பதவியில் இருக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றால், அதிபராக தான் ஒரு மணி நேரம் கூடப் பதவியில் இருக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக எடுத்துக் கூறியிருந்தார்.

அதிகாரங்களை ரணில் விக்ரமசிங்க தன்போக்கில் பயன்படுத்தியதால் தான், அவரை பதவிநீக்கும் முடிவுக்கு வந்ததாகவும், 2015 அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட எடுத்த முடிவை விட இது கடினமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, வடக்கு- கிழக்கு இணைக்கப்படுவதையோ, சமஸ்டி அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதையோ தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், அதைச் செய்வதானால் தனது பிணத்தின் மீதே நடக்கும் என்றும் சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!