மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று இரண்டு அமைச்சர்கள் மற்றும், ஒரு இராஜாங்க அமைச்சர், ஒரு பிரதி அமைச்சரை நியமித்துள்ளார்.

தினேஸ் குணவர்த்தன பெரு நகர மற்றும், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வாசுதேவ நாணயக்கார, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல, ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக நேற்று பதவிப் பிரமாணம் செய்தார்.

ஐதேகவில் இருந்து தாவியுள்ள புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த,கலாசார, உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி (வடமேல் மாகாண) பிரத அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் நேற்று மாலை சிறிலங்கா அதிபரின் முன்பாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அதுரலியே ரத்தன தேரரும் மகிந்தவுக்கு ஆதரவு
இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்பட்டு வந்தவருமான அதுரலியே ரத்தன தேரர், தாம் சி்றிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.