அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்

அரசியல் கைதிகளை விடுவிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவும் தயாராக இருப்பதாகவும், இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கீச்சகப் பதிவு ஒன்றில் அவர், “தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்க்கும் வகையில் பெறுமதியான கலந்துரையாடல்களை நடத்த எமது தரப்பு தயாராக உள்ளது.

நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபரும், பிரதமரும் தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். ”

ஒரு சில தனிநபர்களின் சுய நல தேவைகளுக்காக, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் அடையாளமாக திகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை, சிலரிடம் அடகு வைப்பது தமிழ் சமூகத்தை ஏமாளிகள் ஆக்கும் செயல்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!