மத்தல, கொழும்பை இந்தியா கேட்டதன் பின்னணியை வெளிப்படுத்துகிறார் விஜேதாச

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால் தான், கொழும்பு துறைமுகத்தையும், மத்தல விமான நிலையத்தையும் இந்தியா கோரியது என்று சிறிலங்காவின் கல்வி உயர் கல்வி அமைச்சராக விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தெரண தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கியது.

அதனால் தான், மத்தல விமான நிலையத்தையும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தையும் தமக்குத் தருமாறு இந்தியா கோரியது என்றும், அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!