இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள நாணயமாற்று அறிக்கையில் இந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 158.12 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 154.34 ரூபாவாக பதிவாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் ரூபாவின் பெறுமதி 2 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதே காலப்பகுதியில் யூரோவின் பெறுமதி 4.8 வீதத்திலும், ஸ்ரேலிங் பவுண்டின் பெறுமதி 4.8 வீதத்திலும், ஜப்பான் யென் ஒன்றின் பெறுமதி 7.1 வீதத்திலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!