முடங்குகிறது தேர்தல் ஆணைக்குழு – முற்றுகிறது நெருக்கடி

நாடாளுமன்றத்தை சிறிலங்கா அதிபர் கலைத்துள்ள நிலையில்,தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய , சுதந்திர தேர்தல் ஆணைத்தின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும், தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.பீ.சி பெரேராவிடம், கையளித்துள்ளதை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சுதந்திர தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மகிந்த தேசப்பிரியவும் நளின் அபயசேகரவும் கையெழுத்திட்டு, இது தொடர்பான அறிக்கையொன்றை நேற்று வெளியிட்டுள்ளனர்.

எனினும், ஆணைக்குழுவின் மூன்றாவது உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் இந்த அறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளார்.

இதன் காரணமாக, தேர்தல் ஆணைக்குழு செயலிந்து போகும் என என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால், தேர்தல் நடைமுறைகள் அனைத்தையும், தேர்தல்கள் ஆணையாளர் நாயகமே தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுதந்திர தேர்தல் ஆணைக்குழு செயலிழக்கும் சூழல் ஏற்படுவது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக கொண்ட இடைக்கால அரசின் மேற்பார்வையில் தேர்தல் நடத்தப்படுவதால், சுதந்திரமான தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவும் செயலிழப்பது நிலைமைகளை மேலும் மோசமாக்கும் என்று அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!