மக்களின் தீர்ப்பிற்காகவே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தார் – வாசுதேவ

நிறைவேற்று அதிகாரியும் சட்டவாக்க அதிகாரியும் முரண்படும்போது அதுதொடர்பில் மக்களின் தீர்ப்பை பெறுவதே ஜனநாயக முறையாகும். அதனாலே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து மக்களின் தீர்ப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தார் என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

பாராளுமன்றம் கலைத்தத்து சட்டவிரோதம் என தெரிவித்து சில அரசியல் கட்சிகள் நீதிமன்றம் சென்றுள்ளன. அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அது அவர்களின் ஜனநாயக உரிமை. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!