நிரந்தர தீர்வு உறுதியாம்!

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுவது உறுதி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியது. எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். சித்தார்த்தன் எம்.பி மாத்திரம் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குழுவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைமைத்துவமும் நெருக்கடியில் உள்ள நிலைகளில் எமது ஆதரவை தருகின்றோம். ஆனால் இதற்கான பலன் என்னவென மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். அதற்காக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுவது உறுதி என்று ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!