கெமரூஜ் தலைவர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டனர்- வெளியானது வரலாற்று தீர்ப்பு

கம்போடியாவின் போல்பொட் அரசாங்கத்தின் இரு தலைவர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என ஐக்கியநாடுகள் ஆதரவுடனான கெமர்ரூஜ் தீர்ப்பாயம் வரலாற்று தீர்ப்பளித்துள்ளது.

நுவன் சீ (92) கியுசம்ஹன் ஆகியோரே இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

கம்போடியாவின் சாம் முஸ்லீம்கள் மற்றும் வியட்நாமியர்களிற்கு எதிராக இவர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

கெமரூஜ் அரசாங்கத்தின் இரு முன்னாள் அதிகாரிகளிற்கும் இனப்படுகொலைக்காக ஆயுள்தண்டனையை தீர்ப்பாயம் வழங்கியுள்ளது.

இருவரும் படுகொலைகள் ,கட்டாய மதமாற்றம்,அடிமைப்படுத்தல், சிறைத்தண்டனைகள்,சித்திரவதைகள் அரசியல் அடிப்படையில் வன்முறைகள் பாலியல் வன்முறைகள் ஆகியவற்றில் ஈடுபட்டனர் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

இருவரும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டமைக்காக ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் நிலையிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் கெமரூஜ் அரசாங்கம் இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பது முதல் முறையாக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

1975 முதல் 1979 வரையான காலப்பகுதியில் கெமரூஜ் அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் இரண்டு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!