உருகுவேயிடம் தஞ்சம் கோரும் அலென் காஷியா

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலென் காஷியா உருகுவே நாட்டின் தூதரகத்திடம் தஞ்சம் கோரியுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இவருக்கு நாட்டிலிருந்து வெளியேற முடியாத அளவுக்கு தடை விதிப்பதற்கு அந் நாட்டு நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெரு தலைநகர் லீமா நகரில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை பிரேஸில் நிறுவனமொன்றுடன் மேற்கொண்டதன் மூலம் இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக அலென் காஷிய மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அலென் காஷியா தன் மீது சுமத்துப்பட்டுள்ள குற்றச் சாட்டு அரசியல் சதி என குறிப்பிட்டுள்ளர்.

இந் நிலையில் இவருக்கு தஞ்சம் வழங்குவது சம்பந்தமாக இதுவரை முடிவு செய்யப்படவில்லை என உருகுவே அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!