புலனாய்வுத் தகவலால் கலரியை முடிய சபாநாயகர்!

நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் குழப்புவதற்கான நடவடிக்கைகள் சிலரால் மேற்கொள்ளப்படலாம் என கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே பொதுமக்கள் கலரியும் மூடப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று மதியம் 12 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகும்போது சபை நடவடிக்கைகளைக் குழப்புவதற்கு சிலர் ஆயத்தநிலையில் இருப்பதாக எமக்குப் புலனாய்வுத் தகவல்கள் உறுதியாகத் தெரிவித்திருந்தன.இதனாலேயே பொது மக்கள் கலரி மூடப்பட்டதுடன், நாடாளுமன்றத்திற்கான பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினர் தயார் நிலையிலும் வைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறக்கூடாது. இவை தொடர்பில் நாம் நாட்டினது நலனை முன்னிறுத்தி பொறுப்புடன் செயற்படவேண்டும்’ என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!